புத்தளம் கற்பிட்டி பகுதியில் உள்ள ஏத்தாளையில் நேற்று முந்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 48 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் மரணமாகியுள்ளார். இரு இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற கைக்கலப்பினையடுத்து, இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இப்பெண் இடையில் அகப்பட்டு மரணமடைந்துள்ளார். கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரின் தாயாரே இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவராவார். கைகலப்பு உச்சக் கட்டத்தை அடைந்ததையடுத்து ஒருவர் மற்றையவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த வேளையில் இடையில் அகப்பட்டுக் கொண்ட இப்பெண் கொல்லப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment