Thursday, November 13, 2008

விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம் பாதாள உலகத்தினர் தொடர்பு வைததிருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்ய வேண்டும். - விஸ்ஸ கமல ஸ்ரீ தேரர்


கிழக்கு மாகாணத்தையும் மேல் மாகாணத்தையும் தளமாகக் கொண்டு செயற்படும் முஸ்லிம் பாதாள உலகக் கோஷ்டியினருக்கும் புலிகளுக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இது தேசிய பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டுமென தேசிய சங்க சபாவின் சர்வதேச பிரிவு செயலாளர் விஸ்ஸ கமல ஸ்ரீ தேரர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு, மருதானை, மாளிகாவத்தை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டுமெனக் கோரும் மகஜரொன்றினைப் பொலிஸ்மா அதிபரிடம் நேற்றுக் கையளித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே இவ்வாறு கூறினார்

இச்சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம் பாதாள உலகத்தினர் இருப்பதாகவும் இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்களெனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பான ஒளிப் பதிவு நாடா மற்றும் புகைப்படங்களையும் தாம் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்ததாகவும் அவர் தெரித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com