Wednesday, November 5, 2008

தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய அரசியல் தீர்வை சர்வ கட்சிக்குழு தயாரிக்கிறது - அமைச்சர் திஸ்ஸ.

தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய அரசியல் தீர்வொன்றையே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்து வருகின்றது என குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர். திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் நேற்று (04.11.2008) தெரிவித்துள்ளார். தீர்வுத் திட்டத்தை விரைவில் தயாரித்து முடிப்பதற்குத் தீர்மானித்துள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கவேண்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியொருவரை குழுவில் இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்றுமுந்தினம் 86 ஆவது தடவையாக கூட்டத்தை நடத்தியுள்ள சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இந்த மாதமளவில் தீர்வுத் திட்டத்தை தயாரித்து முடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் விதாரண தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வொன்றை காணமுடியும் என்று நம்புகின்ற புலிகள் அதில் தற்போது தோல்;வியடைந்து வருகின்றனர். இந்தோனேஷியாவின் ஆசே மாகாணத்தில் செயற்பட்ட அமைப்பு தோல்வியைத் தழுவிய நிலையிலேயே அரசியலுக்கு வந்தார்கள். அவ்வாறான ஒரு நிலை புலிகள் இயக்கத்திற்கும் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment