சுண்ணாகம் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரைத் தாக்கிவிட்டு பணம் கொள்ளை.
சுண்ணாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் பட்டப்பகல் வேளையில் முகாமையாளரைத் தாக்கிவிட்டு 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சுண்ணாகம் ஹொட்டியாலடியிலுள்ள நிலையத்திலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்குவதற்காக வந்த இருவர் விற்பனைப் பணத்தை கணக்கெடுத்துக் கொண்டிருந்த முகாமையாளரிடம். சென்று ஒயில் இருக்கிறதா என வினவியுள்ளனர். முகாமையாளர் பதில் சொல்ல முற்படுகையில் அவரது முகத்தில் கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்த பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக மேற்படி நிலையத்தின் முகாமையாளர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் யாழ். பிராந்திய முகாமையாளரிடமும், சுண்ணாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
0 comments :
Post a Comment