கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வவுனியா பிரதேச செயலகத்திற்கு 1கோடியே முப்பது லட்சம் ருபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவா கூறுகையில் வன்னி மீட்பு போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை 182 பேர் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுள் பாதுகாப்பு தேடி வந்துள்ளனர். அத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என எதிபார்க்கப்படுகின்றது. அவர்களது அத்தியாவசிய தேவைகளை பேணுமுகமாக அங்கு ஒர் விசேட குழுவொன்று நிறுவப்படவுள்ளது. அவ்வாறு நிறுவப்படும் அக்குழுவினர் அம்மக்களின் சகல தேவைகளையும் பிரதேச செயலரின் மேற்பார்வையில் முன்னெடுப்பர் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment