புலிகளது தாக்குதல் அபாயத்தில் கண்டி இரண்டாம் இடத்தில். பிரதி பொலிஸ் மா அதிபர்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறத்தில் உள்ள நகரங்களில் கொழும்புக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் கண்டி இருப்பது தெரியவந்துள்ளது என மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டி, மாத்தளை, நுவரேலிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 115 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் மூவர் வளங்கிய தகவல்களின் அடிப்டையில் 500 கிலோகிராம் சீ4 ரக வெடிமருந்துகள் உட்பட பல்வேறு இராணுவ உபகரணங்களும் ஆயுதங்களும் கைப்ற்றப்பட்டுள்ளன.
மேலும் புலிகளினால் இப்பிதேசங்களுக்கு கொண்டுவரப்பட இருந்த ஆயுதங்கள் இலங்கையின் இதரபிரதேசங்களில் வைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களையும் அடிப்படையாக கொண்டு கண்டி நகரம் புலிகளின் அச்சுறத்தலுக்கு உள்ளாகி வருகின்றதென்பதை உணர முடிகின்றது என்னறார்.
0 comments :
Post a Comment