Monday, November 3, 2008

கற்பிட்டி பகுதியில் சுற்றிவளைப்பு.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு முதல் பாளையடி வரையிலான பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 4.30 மணி முதல் 8 மணிவரை இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பின்போது 93 பேர் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட போதிலும் 7 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 7 பேரில் இருவர் பெண்கள் எனவும் தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com