Wednesday, November 26, 2008

கியூமன் ரய்ட்ஸ் வாட்ச்சின் அறிக்கையை மறுதலிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.



கிழக்கில் இடம்பெறும் கோரப் படுகொலைக்கும் ஆட்க்கடத்தல்களுக்கும் யார் சூத்திரதாரிகள் என்பதை கியூமன் ரய்ட்ஸ் வாட்ச் அமைப்பு சரியாக இனம் கண்டு கொள்ளாதது ஏன்?

யுத்தத்தால் தொடர்ந்தும் மனித அழிவுகளும் அவலங்களும் கிளைவிட்டு வளாந்து கொண்டிருக்கும் என்பதனை உணர்ந்து இன்று பாஷிசத்திற்க்கு எதிரான ஜனநாயக நீரோட்டத்தில் எங்களை இணைத்து எமது கிழக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவான கட்சியாக ரி.எம்.வி.பி கட்சியை வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாடுகளை மனிதத்துவத்துடன் ஏற்று எமது பிரதேசத்தில் எம் உறவுகள் எதிர்கால சந்தேகம் இன்றி பரிபூரணத்துவமான வாழ்வை அச்சமின்றி கொண்டு நடாத்தும் நிலைக்கு அவர்களுக்கான சூளலை உருவாக்கி அவர்களையும் யுத்த மாயையின் உருக்களில் இருந்து மீட்டு எம்மைச் சார்ந்த ஜனநாயக வழிப்பற்றுதலின்பால் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

எம் கிழக்கு மண்ணும் மக்களும் நிம்மதியான காற்றை சுவாசிப்பதை கண்டு சகித்துக்கொள்ள இயலாத அராஜயக் குழுக்களும் புலிகளும் எமது கிழக்குப் பிரதேசத்தில் திட்டமிட்ட உயிர்ப் படுகொலைகள், கப்பம், ஆட் கடத்தல்கள் என்பவற்றை செய்து விட்டு இம்மாயை நாடகத்தின் சுத்திரதாரிகளாக எங்களை சித்தரித்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த ஏற்பாட்டின்படி கியுமன் ரய்ட்ஸ் வாட்ஸ் அமைப்பு T.M.V.P யினர்தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை எந்தவித நிருபனமும் இன்றி நியாயங்களின் பக்கம் நின்று பார்க்காமல் எடுத்துக் கூறுவதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான மனித நேயமற்ற செயற்பாடுகளில் எமது கட்சி ஒருபோதும் தன்னை இணைத்துக்கொள்ளாது என்பதையும் ஆணித்தரமாக கூறிக்கொள்வதோடு, கிழக்கின் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் படுகொலைக்கும் கடத்தல்களுக்கும் யார் காரணம் என்பதை நியாயத்தின் மூலமான விவாதத்தின் ஊடாக நிரூபித்துக்காட்ட நாங்கள் தயார் நிலையில் இருக்கின்றோம் என்பதையும் மிகவும் இறுக்கமாக சொல்லிக்கொள்கின்றோம்.

இன்று உலகிலுள்ள ஜனநாயக தேசங்களில் ஜனநாயகத்தை மதிக்காத பாஷிசக்கும்பல்கள் ஜனநாயகப்பற்றாளர்களின் மீது பாஷிச சேற்றை பூசி அவர்களையும் தங்கள் வம்சம் போல் சித்தரித்துக்காட்டிக்கொண்டிருப்பதின் ஒரு அங்கமாகவே இன்று இலங்கையின் கிழக்கில் இடம் பெறும் மனிதபடுகொலைகளையும் கடத்தல்களையும் ஜனநாயக விரோதிகள் எம் பெயர் கொண்டு திரிவுபடுத்துகின்றார்கள். இதை வன்மையாக மீண்டும் மீண்டும் கணடிப்பதோடு உன்னையிலேயே இவற்றை மேற்க்கொள்ளும் சூத்திரதாரிகள் யார் அவர்கள்தான் கிழக்கு மக்கள் நிம்மதியான காற்றை இனிமேலும் சுவாசிக்க கூடாது என்பதை கங்கணம் காட்டிக் கொண்டிருக்கும் வன்னிப் புலிகள் என்பதை நியாயத்தின்பால் நிருபிக்க காத்துக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வண்ணம்
ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com