வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் பட்டியல் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஊடாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்கள் வன்னி மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தவிர்ந்த கூடாரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து மதிப்பீட்டு அறிக்கையொன்றை இன்று வவுனியாவிலிருந்து தயாரிக்கவுள்ளனர். தேவை மதிப்பீடு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டதும் நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அரச அதிபர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளனர். அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிப்பர். இதையடுத்து இந்தியாவிலிருந்து கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்கள் யாவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஊடாகவே வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment