கடந்த இருநாட்களுக்கு முன்னர் வைத்திய அதிகாரி ஒருவர் கொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் வந்தாறுமுல்லை, ஓலவில் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் நிமித்தம் எஸ்எஸ்பி ஆனந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவ்நியமனம் பாதுகாப்பமைச்சின் செயலர் கோட்டபாய ராஜபக்ச அவர்களின் பணிப்புரையின் பேரில் இடம்பெற்றுள்ளது. உடனடியாக கடமையை பாரமெடுக்க உள்ள எஸ்எஸ்பி அங்கு பாதுகாப்பு கடமையில்
உள்ள விஷேட அதிரடிப்படையினருடன் கலந்தாலோசித்து மேலதிக பாதுகாப்புக்களை உறுதிப்படுத்த உள்ளதாக தெரிவருகின்றது. குறிப்பாக வைத்திய அதிகாரிகளுக்க ஆயுதம் தரித்த பொலிசார் பாதுகாப்பு வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment