பண்டிகைக் காலங்களில் விலைகளை கட்டுப்படுத்தும் முறையான செயற்திட்டம் - ஜனாதிபதி ஆலோசனை.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகரிக்கக் கூடிய விலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், முறையான செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். அலரிமாளிகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூடியபோதே ஜனாதிபதி இப்பணிப்புரையை வழங்கியுள்ளார். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அமைச்சர்களான தி.மு. ஜயரத்ன, பீலிக்ஸ் பெரேரா, சீ.பி.ரத்னாயக்க, பந்துல குணவர்த்தன, ஜோன் செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌஸி, ஹேமகுமார நாணயக்கார, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அஜித் கப்ரால் மற்றும் அமைச்சர்களின் செயலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். பண்டிகைக் காலங்களையொட்டிய எதிர்வரும் மாதங்களில் வர்த்தக சந்தைகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் சம்பந்தமாக இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment