Tuesday, November 11, 2008
ஐந்து பிள்ளைகளின் தாய் புலிகளுக்காக வெடிமருந்து கடத்தி பிடிபட்டார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் நோயாளிகள் காவுவண்டியில் மிகவும் வழமைக்கு மாறான பாரத்துடன் கொண்டுவரப்பட்ட பயணபொதி ஒன்று பரிசோதிக்கப்பட்ட போது அங்கு மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோகிராம் சீ4 ரக வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 84 வயதான மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த தனது பாட்டியை உடையல்கட்டு, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு எடுதுவந்த ரஞ்சிதமலர் கேதீஸ்வரன் என்பவரிடம் புலிகள் இப்பயணப்பொதியை ஏமாற்றி கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது:
இப்பயணப்பொதியை கொண்டுவந்த ரஞ்சிதமலரை விசாரணை செய்துவரும் படையினர் செல்லம்மா சுந்தரராஜன் எனப்படும் வயோதிபப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண் தனது பாட்டி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு அவரை கொண்டுவருவதற்கு ஐசிஆர்சி யினரின் வழித்துணை கிடைத்தபோது தான் பயணப்பை ஒன்றை வாங்குவதற்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு சென்றிருந்த போது அங்கு வந்த புலிகளின் உறுப்பினர் ஒருத்தர் தன்னை இப் பயணப்பொதியை வாங்குமாறு கூறியதாகவும் அவ்வாறு வவுனியா சென்றவுடன் அப்பையை வவுனியாவில் உள்ள தனது நண்பர் அல்லது உறவினர் ஒருவரிடம் கையளிக்குமாறும் தெரிவித்துள்ளார். அப்பையை கையளிக்குமுகமாக ஐரோப்பிய நாடொன்றின் தொலைபேசி இலக்கம் ஒன்று அப்பெண்ணிடம் கொடுக்கப்பட்டதாகவும் அப்பொண் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment