படைத்தரப்புச் செய்திகள்
புலிகளின் ஐந்து சடலங்கள் ஐசிஆர்சி யினரிடம் கையளிப்பு.
வடபோர்முனையில் கொல்லப்பட்ட புலிகளின் ஐந்து சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு ஆண் புலிகளதும் ஒரு பெண் புலியினதும் சடலங்கள் அடங்குவதாகவும் சடலங்களை ஏற்றிக்கொண்ட பாரஊர்தியை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக அரசகட்டுப்பாடற்ற பகுதி நோக்கி எடுத்துச் சென்றதாக தெரிவிக்கின்றனர்.
புலிகளின் யாழ் முன்னணி நிலைகள் மீது படையினர் தாக்குதல்.
கிளாலி மற்றும் நாகர்கோவில் புலிகளின் முன்னணி அரங்குகள் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீர் தாக்குல் கொடுத்த படையினர் புலிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன் அவர்களின் 8 பாதுகாப்பு பங்கர்களை முற்றாக அழித்து சேதப்படுக்தியுள்ளனர். இச்சண்டை 10 மணிவரை 8 மணித்தியாலயங்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கிளிநொச்சி போர்முனையில்.. ..
கிளிநொச்சியில் தமது நடவடிக்கையை தொடர்ந்து வருகின்ற படையினர் அக்கிராயன்குளம், கோவில்கட்டு, வன்னேரிக்குளம், பழைக்குளம் ஆகிய பகுதிகளில் புலிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். அக்கராயன்குளத்தில் செயல்படுகின்ற 57ம் படைப்பிரிவினர் கோவில்கட்டு மேற்கொண்ட தொடர் தாக்குதல்களில் புலிகளின் பலத்த பாதுகாப்பு வேலிகளை உடைத்து ஊடறுத்து தாக்கி உள்ளனர். ஆங்கு ஆகக்குறைந்தது 3 புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 ரி56 ரக துப்பாக்கிகளும் 3 தொலைத்தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு முகம்கொடிக்க முடியாத புலிகள் பின்வாங்கியதுடன் படையினர் மீது ஆட்லறி மழைபொழிந்துள்ளனர்.
0 comments :
Post a Comment