ரெலோ அமைப்பின் இருவர் வவுனியாவில் சுட்டுக்கொலை.
தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் இருவர் தமது புதிய காரியலம் ஒன்றை அமைப்பதற்காக அங்கு நிர்மான வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இனம் தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ப்பட்டுள்ள இக்கொலையை சிறி-ரெலோ அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. ரெலோ அமைப்பின் ஒருபகுதியினர் புலிகள் அமைப்பின் துணைக்குழுவாக செயல்பட்டுவருகின்ற நிலையில் அவ்விடயத்தில் அதிருப்தி அடைந்துள்ள ரெலோவின் மூத்த உறுப்பினர்களால் சிறி-ரெலோ எனும் புதிய அரசியல் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு அதன் வேலைத்திட்டங்கள் விஸ்தீரணமாகி வருகின்ற நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்படுகொலைகளானது அவ்வியக்கத்தின் வழர்ச்சியை முடக்குவதற்கான சதியேயாகுமென பலரும் பேசிக்கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment