இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு.
இலங்கையில் இளைஞர் யுவதிகளுக்கு விரைவில் லிபிய மற்றும் மத்தியதரைக் கடலைச் சூழவுள்ள நாடுகளில் அதிகளவு தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. லிபிய நாட்டு தொழில், மனிதவள, தொழிற் பயிற்சி அமைச்சர்களுடன் கால்நடைகள் அபிவிருத்தி பிரதிஅமைச்சர் தலைமையிலான தூதுக்குழு நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இச்சந்திப்பின் போது பிரதியமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க லிபியா மற்றும் மத்தியதரைக் கடலைச் சூழவுள்ள நாடுகளின் பாற்பண்ணைகளில் இலங்கையின் இளைஞர், யுவதிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும், அதன் பொருட்டு அந்த நாடுகளின் சுவாத்தியம், விவசாய பண்ணைத் தொழில் முறைகளுக்கு ஏற்ற வகையில் குறுங்கால பயிற்சியை ஒன்றை லிபிய நாட்டில் பெற்றுக் கொடுத்து பின்னர் அவர்களினூடாக உள்நாட்டில் பயிலுனர்களைப் பயிற்றுவித்து லிபிய மற்றும் மத்தியதரைக் கடலைச் சூழவுள்ள நாடுகளில் வேலைக்கமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment