தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் ரகு எனப்படும் நந்தகோபன் சுட்டுக்கொலை.
இன்று நண்பகல் 11.30 மணியளவில் அத்துரகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் குமாரசாமி நந்தகோபன் மற்றும் கிழக்கு மகாண சபையின் முதலைசைர் பிள்ளையானது இணைப்புச் செயலாளர் அசாத் மௌலானவின் வானச்சாரதி சமீர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அத்துரகிரிய ஒறுவல பிரதேசத்தினூடாக கார்ஒன்றில் நந்தகோபன் அவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது மோட்டார் வண்டியில் வந்த ஆயுததாரிகள் காரை இடைமறித்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புலிகளால் இலக்கு வைக்கப்பட்டு வருகின்ற இத்தருணத்தில் இவ்விடயம் அவ்வியக்கத்தினுள் நிலவுகின்ற உள்முரண்பாடுகளின் எதிர்விளைவாகவும் இருக்கக்முடியுமா என்கின்ற சந்தகம் பலர் மத்தியிலும் நிலவுகின்றது. அதே நேரம் நந்கோபனுடன் கொல்லப்பட்டுள்ள மற்றய நபர் அசாத்மௌலானாவின் வாகனச்சாரதி என்றும் அவ்வியக்கத்தினுள் நிலவுகின்ற ஒட்டுமொத்த முரன்பாடுகளுக்கும் மூலகாரணமாக அசாத்மௌலா திகழ்வதாக பல ஊடகங்களும் தெரிவித்துள்ள அதே நேரம் இன்று இவருடைய பிரயாணம் பற்றி அசாத்மௌலானாவே முற்கூட்டி அறிந்திருந்தாகவும் இவ்விடயம் அவர் மீதுள்ள சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கிழக்கு முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) இன்று காலை கொழும்பு அத்துருகிரிய என்னும் இடத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். இவருடன் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அசாத் மௌலானாவினுடைய சாரதி சமீர் என்பவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். ரகு அவர்கள் கடந்த மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பியதில் இவரின் பங்கு அளப்பரியதாகும். முதலமைச்சர் சந்திரகாந்தன் பதவியேற்றதில் இருந்து கட்சித் தலைமைப் பொறுப்பையும் முதலமைச்சருடைய அந்தரங்கச் செயலாளராகவும் பணியாற்றிவந்தார். இவரது சொந்த வாழ்வில் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராக கடமை புரிந்திருந்தார். இவரது மரணம் கிழக்கு மாகாண மக்களின் விடியலில் மிகப்பெரிய தடைக்கல்லாகும். இவர்களது இழப்பையிட்டு முதலமைச்சர் வட்டாரங்கள் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஊடகப்பிரிவு
முதலமைச்சர் அலுவலகம்.
0 comments :
Post a Comment