Wednesday, November 5, 2008

இந்தியாவோ, வேறெந்த நாடுகளோ இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - அமைச்சர் ரோஹித.

பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா உட்பட எந்த சர்வதேச நாடுகளும் அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்கவில்லை. மாறாக சகல நாடுகளும் தமது ஆதரவினையே வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஜோஸப் மைக்கல் பெரேரா முன்வைத்த கவனயீர்ப்பு அறிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ எம்.பி. இந்திய அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வகையில் அவரது இந்தியாவிற்கான விஜயம் இரு நாடுகளுக்குமான நல்லெண்ணத்தையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை, இந்தியா இலங்கைக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க மேற்கொண்டுள்ள முடிவும் நல்லெண்ணத்தின் ஒரு வெளிப்பாடேயாகும். இது போன்று வேறு எந்த நட்பு நாடுகளாயினும் நல்லெண்ண அடிப்படையில் உதவிகளை வழங்கினாலும் அதனைப் பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கையின் பிரச்சினை தொடர்பாக தமிழ் நாட்டில் தவறான எண்ணக்கரு நிலவுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com