Sunday, November 16, 2008

இலங்கையில் வெற்றி வாரம் கொண்டாடப்படுகின்றது.



அரச படையினரால் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகளில் 15 வருடங்களுக்கு மேலாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரி பிரதேசம் முற்றாக படையினர் வசம் வீழந்ததுடன் கொழும்பிற்கும் யாழ்பாணத்திற்குமான தரைவழிப் பாதையை திறக்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. இவ்வெற்றியை ஓர் சிறந்த வெற்றியாக கருதும் அரசதரப்பினர் இவ்வாரத்தை வெற்றிவாரம் என பிரகடணப்படுத்தியதையடுத்து இலங்கையின் சகல பிரதேச மக்களும் தமது வீடுகளிலும் தெருக்களிலும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு அவ்வெற்றியை கொண்டாடுவதை அவனிக்க கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment