Monday, November 3, 2008

பதவியிலிருந்து விலகுமாறு கட்சி என்னை கோரவில்லை - கண்டி மாநகர பிரதிமேயர்.

ஐ.தே.கட்சி அலுவலகத்திலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோ பிரதிமேயர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டால் மட்டுமே நான் பதவி விலகுவேன் என பிரதி மேயர் துமிந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரை என்னை பதவியிலிருந்து விலகுமாறு கட்சி கோரவில்லை என்றும் கண்டி பிரதிமேயர் துமிந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நான் இரண்டு வருடமும் இலாஹி ஆப்தீன் இரண்டு வருடமும் பிரதி மேயர் பதவியினை வகிப்பதென தீர்மானிக்கப்பட்டமை உண்மையே என்றும், ஆனால் கட்சி என்னை பதவி விலகுமாறு கேட்கும் பட்சத்திலேயே நான் பதவி விலகுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment