மட்டுநகரில் தலைக்கவசம் அணிவது கட்டாயம்.
மட்டு. மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களில் அதிகமானோர் தங்கள் தலைக்கவசங்களை அணிவதில் கவனம் செலுத்துவதில்லை எனவும், இதனால் விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களின் தலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுவதாகவும் மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைக்கவசம் அணிவது தொடர்பாக காட்டிய அசமந்த போக்கே இதற்குக் காரணம் எனக் கூறிய போக்குவரத்துப் பொலிஸார் மட்டு நகரில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்னும் சட்டம் இன்றுமுதல் (03.11.2008) மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment