Sunday, November 2, 2008

காரைதீவு வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு.



சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்றும் ரி -56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கைக்குண்டு, மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் நீர்பாசனத் திணைக்களத்தில் தொழில் புரிந்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment