Wednesday, November 26, 2008
மன்னிப்புச் சபை உண்மைக்குப் புறம்பானது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சு.
சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அனர்த்த முகாமைத்தவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மோதல்களினால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக கடந்த 19ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்ய இலங்கை அரசு தவறியுள்ளதென அவ்வமைப்பு சாடியிருந்தது.
இவ்வறிக்கை தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ள இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, இலங்கை அரசாங்கம் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அடைந்துள்ள வெற்றிகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் நேர்மையான பகுப்பாய்வு ஒன்றினை மேற்கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளதுடன் அவ்வறிக்கை உண்மைக்குப் புறம்பானது எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment