திருமலையில் ஒருவர் சுட்டக்கொலை.
திருகோணமலை கணேஷ்லேன் எனும் இடத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பிள்ளையின் தந்தையான புலேந்திரராஜா (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கும்புறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட இவர் கணேஷ் லேன் எனும் இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் என்றும் சம்பவ தினம் வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டவரின் சடலம் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment