முரளிதரன் எம்பி மட்டுநகரில்
கட்சியின் உட்பூசல் தொடர்பாக அகில மட்டத்தில் நிலவுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முகமாகவும் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையினரையும் சந்தித்து அவர்களின் அலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் கருணா அம்மான் மட்டக்களப்பு சென்றுள்ளதாக அவரது பிரத்தியேக செயலாளர் ஜீவேந்திரன் இலங்கைநெற்.கொம் இற்கு தெரிவித்தார்.
ஜீவேந்திரன் தொடர்ந்தும் கூறியதாவது கடந்த இருவாரங்களுக்கு முன்பு மட்டுநகர் சென்றிருந்த த.ம.வி.பு தலைவர் கருணா அம்மான் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினரை சந்தித்து அங்கு நிலவுகின்ற குறைநிகைளைக் கேட்டறிந்தது அவற்றை அரசின் உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றதுடன் கிழக்கு பல்கலைக்கழக உயர்மட்டத்தினரை அரசின் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஓர் சந்திப்பை எற்படுத்தி அவசிய தீர்வுகளுக்கான வழிகளை அமைத்துக் கொடுத்திருந்தார் என்றும் அதன் தொடர்சியாக இம்முறை கிழக்கில் நிலவுகின்ற வைத்திய, சுகாதார குறைபாடுகளை கேட்டிறிந்து அதன் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வாவுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரை நேரடியாக தொடர்வுபடுத்தி அதற்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment