Thursday, November 20, 2008
கருணாநிதிக்கு எதிராக வழக்குத் தொடர்கிறார் ஜெயலலிதா.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரச சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலைத் தூண்டிவிட்டதாக தம் மீது கூறியகுற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்கக் கோரி முதல்வர் கருணாநிதிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் கடந்த 12ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவங்களின்போது, கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் துறைக்குப் பொறுப்பு வகிப்பவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற முறையிலும் .தார்மிக அடிப்படையில் முதல்வர் கருணாநிதி தன் பதவியில் இருந்து விலக வேண்டும் ஏன ஜெயலலிதா கூறியிருந்தார்.
கடந்த 16ம் தேதி கோவை சென்றபோது முதல்வரிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
''என்னை ராஜிநாமா செய்ய வேண்டுமென சொல்வதற்காகவே மாணவர்களை இவர்களே தூண்டிவிட்டிருக்கிறார்கள் ஏன்று தெரிகிறது'' என முதல்வர் அப்போது பதில் அளித்தார்.
இவ்வாறு பேசியதற்காக முதல்வர் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக ஜெயலலிதா கூறினார். அப்படி வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார் ஏன கருணாநிதி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் புதன்கிழமை ஜெயலலிதாவின் சார்பில் வழக்கறிஞர் ஐ. நவநீதகிருஷ்ணன் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீஸ் விவரம்:
சட்டக் கல்லூரி மோதல் தொடர்பாக காவல் துறையின் செயல்பாட்டை மாநிலம் முழுக்க ஏல்லோருமே கண்டித்தனர். ஏதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என உங்களை கேட்டுக் கொண்டார்.
இனால், மோதலைத் தூண்டியதாகக் கோவையில் நீங்கள் அளித்த பேட்டி, ஆதாரமற்ற, பொய்யான, அவதூறான, ஏன் கட்சிக்காரரின் நற்பெயருக்கும், கண்ணியத்துக்கும், பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் சம்பவம் பற்றி நீங்கள் பேட்டி அளித்திருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
நீங்கள் கோவைக்குச் செல்வதற்கு முன்பாக, இச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் விசாரணைக் கமிஷனை உங்கள் அரசுதான் அமைத்தது. இந் நிலையில், உங்களைப் பதவி விலகச் சொன்ன ஓரே காரணத்துக்காக, ஏன் கட்சிக்காரர்தான் மோதலைத் தூண்டிவிட்டார் ஏன பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறீர்கள்.
தமிழகத்தின் முதல்வர் ஏன்ற வகையில், நடந்துவிட்ட அந்த சம்பவத்துக்கு உங்களுக்கு தார்மிக மற்றும் சட்ட அளவில் பொறுப்பு உண்டு. சட்டத்தின் இட்சியை மதிக்கக் கூடிய, ஏதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய, எப்போதுமே வன்முறையை எதிர்த்து வரும் ஏன்னுடைய கட்சிக்காரர், முதல்வா பதவியில் இருந்து நீங்கள் விலக வேண்டும் ஏன்று கோருவதற்கு ஏல்லா உரிமையும் உண்டு.
அவ்வாறு அவர் கேட்டதன் மூலம், மோசமான சட்டம் ஓழுங்கு நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற, என் கட்சிக்காரர் சரியான கோரிக்கையைதான் முன்வைத்திருக்கிறார். அதில் ஏந்தத் தவறும் இல்லை.
உங்களுடைய கோவை பேட்டியால் ஏனது கட்சிக்காரருக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அவருடைய கட்சித் தொண்டர்களும், நண்பர்களும் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொண்டு இதுபற்றிக் கேட்கின்றனர்.
உங்கள் குற்றச்சாட்டை ஏமது கட்சிக்காரர் மறுக்கிறார். அவர் ஏப்போதுமே வன்முறையைத் தூண்டியது இல்லை.
சட்டம், ஓழுங்கை முறையாகப் பராமாரிப்பதற்குப் பதிலாக, எமது கட்சிக்காரர் மீது நீங்கள் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறீர்கள்.
சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும், நாட்டுப்பற்று மிக்கவராக இருக்கும், அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும், முன்னாள் முதல்வரும் இப்போது சட்டப்பேரவை ஏதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு இதனால் ஏற்பட்ட இழப்புகளை பணத்தால் கணக்கிட முடியாது.
கோவை பேட்டி குறித்து நீங்கள் ஏழுத்து மூலம் மன்னிப்பு கேட்பதுடன், இந்த நோட்டீஸ் கிடைத்த பிறகு வெளியாகும் பத்திரிகைகளின் அடுத்த பிரதியில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பிரசுரிக்கப்படும் வகையில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், இவ்வாறு பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதைத் தடுப்பதற்காக, உங்கள் மீது உரிய சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் ஏடுக்கப்படும். அதுதவிர ஏமது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.1 கோடி நஷ்டஈடும் கேட்கப்படும். அதுமட்டுமின்றி வழக்குச் செலவுகளும் கோரப்படும் ஏன நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment