Wednesday, November 26, 2008

இரத்த வெறி பிடித்த பாஷிச கும்பல்களுக்கு எமது தேசம் புதிய பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை - கருணா.



எமது அப்பாவி பொதுமக்கள் மீதான படுகொலையை வன்மையாக கண்டிக்கிறார் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான விநாயகமூர்த்தி-முரளிதரன் அவர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 25.11.2008இல் மூன்று குடும்பஸ்தர்கள் கோரப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொறுப்பு வாய்ந்த தலைவர் என்ற வகையிலும் மற்றும் எமது கிழக்கு தேசத்தின் குடிமக்கள் அனைவரும் எனது சகோதரத்துவமான நேச உறவுகள் என்ற வகையிலும் நான் இவற்றை வன்மையாக கண்டிப்பதோடு பல தசாப்த காலங்களாக எதிர்கால நம்பிக்கையிழந்து துன்பமும் துயரமும் படிந்த வாழ்வை எதிர்நோக்கி வாழ்ந்து வந்த எமது கிழக்கு தேச மக்கள் இன்று வாழ்வில் நம்பிக்கைமிகுந்த சந்தோசக் காற்றை சுவாசித்து கொண்டிருப்பதை கண்டு சகித்துக் கொள்ள முடியாத பாஷிச வெறியர்கள் வெளிக் கொணர இருக்கும் பிரபாவின் பிறந்த தினத்தை தன்னுள் கொண்டாட எம்முன் எமது தமிழ் உறவுகளை சுட்டழித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இன் நிலை தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய நடவெடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

மற்றும் எமது கிழக்குத் தேசத்தின் அபிவிருத்தியிலும் கிழக்கு மக்களின் நலன்களிலும் பூரணத்துவமான மன அக்கறையுடன் சேவை செய்யும் பொருட்டு இன்று எமது நடவடிக்கைகளை ஜனநாயக நீரோட்டத்தின்பால் செலுத்தி அதனூடாக நீண்டகாலமாக எமது சமூகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுகமான வரம்பிட வேண்டும் எனும் உன்னதமான செயற்ப்பாட்டில் இறங்கியிருக்கும் நிலையில் நாட்டிலும் எமது பிரதேசத்திலும் இறைமைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவித்து கொண்டு, எம்மையும் எமது தேசத்தையும் அழிவுப்பாதையில் இட்டுச் செல்லும் யுத்தத்தை விரிவுபடுத்தி அதனூடாக எமது மக்களை பாரிய இருண்ட படு குழிக்குள் தள்ளி விட எத்தணித்துக் கொண்டிருக்கும் பாஷிச காடையர்களான வன்னிப் புலிகளின் இவ்வாறான கொடுர படுகொலைகளை வன்மையாக கண்டிப்பதோடு கொல்லப்பட்ட எமது சகோதரத்துவ உறவுகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்நத அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு இன்றைய நாளில் நாட்டில் அன்றாட இயல்பு நிலை குழப்பி மக்களுக்கு ஓர் அச்சம் நிறைந்த பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற மன இழுக்கோடு இவ்வாறான சகோதரத்துவ படுகொலைகளை வன்னிப் புலிகள் மேற்கொண்டுள்ளார்கள் இந்த சந்தர்ப்பத்தில் எம் மக்களை மிகவும் விழிப்புடன் செயற்படுமாறும் எமது இனத்தின் உன்மையான விரோதிகள் யார் என்பதனை இனம் கண்டு கொள்ளுமாறும் நான் வினையமாக கேட்டுக் கொள்வதோடு, எமது கிழக்கு பிரதேசத்தில் மேலும் இவ்வாறான சம்பவங்கள் தலை தூக்காது இருக்க உரிய நடவடிக்கைகளை உரியவர்களின் கவனத்திற்க்கு வெளிக் கொணர்ந்து மேற் கொண்டுள்ளேன். அன்று அதிகார வெறி பிடித்து எமது கிழக்கின் புத்தி ஜீவிகளையும் அறிவியல் சமூகத்தினையும் அழித்தொழித்து கொண்டு வந்த பிரபாவின் கும்பல்கள் இன்று அதே செயலை சாதாரண பாமர மக்களிடமும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள. மனித நேயங்களை மறந்து இரத்த வெறி பிடித்த பாஷிச கும்பல்களுக்கு எமது நேசம் புதிய பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை

No comments:

Post a Comment