Sunday, November 30, 2008
காரைதீவு விக்னேஸ்ரா வித்தியாலம் மீள் திறப்புவிழா.
2004 ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்து இயங்காமல் இருந்த காரைதீவு விக்னேஸ்ரா வித்தியாலம் இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. இவ்வைபவத்திற்கு விசேட விருந்தனராக வந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளரும் மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளருமாகிய திரு. இனியபாரதி அவர்கள் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்டிருந்த 4 மாடி வகுப்பறைகளுக்கான கட்டிடத்தின் பெயர்பலகையை திரைநீக்கம் செய்து சம்ரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
நான்கு வருடங்களாக இயங்காமலிருந்த இப்பாடசாலையின் திறப்பு விழா வைபவத்தில் கோட்டக்கல்வி அதிகாரிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பிதேசசபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் என பெருந்தொகையானோர் பங்குகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment