மேல், மத்திய மாகாண சபைகளைக் கலைத்து மிக விரைவில் தேர்தல் நடத்த ஏற்பாடு.
மேல் மாகாணசபை, மத்திய மாகாணசபை என்பவற்றைக் கலைத்து மிக விரைவில் தேர்தல்களை நடத்தவுள்ளதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை ஆலோசனை வழங்கியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரவு- செலவுத்திட்டத்திற்குப் பின்னரே குறிப்பிட்ட இரு மாகாண சபைகளையும் கலைத்து தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பாக மேல்மாகாணசபை, மத்திய மாகாணசபையின் கட்சி முக்கியஸ்தர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment