Tuesday, November 11, 2008
இந்தியாவில் புலிகள் மீதான தடை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 15ம் திததி இந்திய அரசு புலிகள் மீதான நீடித்தமையை எதிர்த்து இந்திய உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி விக்ரம் ஜீத் தலைமையிலான நால்வரை நடுவர்களாக கொண்ட நீதிமன்றம் விசாரணை செய்தது. அங்கு தனது வாதத்தை முன்வைத்த அரசதரப்பு வழக்கறிஞர் பி.பி. மல்கோத்ரா விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதக் கொள்கை கொண்டது அவ்வியக்கம் மேற்கொள்ளும் பயங்கரவாத செயற்பாடுகள் நிரூபிக்கப்பட்டள்ளதன் நிமித்தம் அமெரிக்கா உட்பட உலகில் உள்ள பல நாடுகள் அவ்வியக்கத்தை தத்தம் நாடுகளில் தடைசெய்துள்ளது. இதே விடுதலைப் புலிகள் இயக்கம் தான் இந்திப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை 1991ம் ஆண்டு படுகொலை செய்தது. ஏனவே அவ்வியக்கத்தை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என வாதிட்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நீதிபதி விக்ரம் ஜீத் புலிகள் இயக்கம் ஓர் பயங்கரவாத இயக்கம் என்பதற்கான அதாரங்கள் பல உண்டு என கூறி புலிகள் மீதான தடை இந்தியாவில் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்க அனுமதி வழங்கித் தீர்பளித்தார்.
No comments:
Post a Comment