இன்டநெற் பிரவுஸிங் சென்ரரினால் கலாச்சார சீர்கேடு!
மட்டக்களப்பு பகுதிகளில் தற்பொழுது எண்ணிலடங்காத அளவுக்கு இன்டநெற் பிரவுஸிங் சென்டர்கள் ஆங்காங்கே கட்டுப்பாடின்றி முளைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு மாணவர்கள், கல்விமான்கள் பெண்கள் வெளிநாட்டவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். சில சமுதாய சீர்கேடு விளைவிக்கும் ஆசாமிகளும் வந்து ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் இதே கணனிகளில் டவுண்லோட் செய்து விடுவதால் அவற்றைப் பயன்படுத்தும் ஏனையவர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுகின்றது. இதுபோன்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தகப்பனும். மகளும் சேர்ந்து வெளிநாட்டிலுள்ள உறவினருக்கு ஈ மெயில் அனுப்புவதற்காக ஒரு நெற் பிரவுஸிங் சென்டருக்குச் சென்று அங்குள்ள கம்பியுட்டரை திறந்து பார்த்த பொழுது அங்கு யாரோ வந்த சிலரினால் போடப்பட்டிருந்த ஆபாசப் படங்கள் திரையில் தெரிந்துகொண்டிருக்க தகப்பனும் மகளும் செய்வதறியாமல் திகைத்தனர். இதுபோன்று நிறைய சம்பவங்கள் இடம்பெற்ற போதும் யாரும் இது சம்பந்தமாக எதுவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராவது நடவடிக்கை எடுத்து சிறுவர்களையும் பெண்களையும் இப்படியான கலாச்சார சீர்கேட்டிலுருந்து காப்பாற்றமாட்டார்களா என மக்கள் தெரிவிக்கின்றனர்
0 comments :
Post a Comment