Monday, November 3, 2008

புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல்.



கிளிநொச்சி, இரணைமடுக்குளம் பகுதியில் புலிகளின் நிலைகளை இலக்கு வைத்து நேற்றுக்காலை ஏழு மணிக்கு விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி வடக்குப் புறமாக இரண்டரை கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புலிகளின் விநியோக தளமொன்றின் மீது நேற்றுக்காலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் இரணைமடு குளத்திற்கு வடக்கே புலிகளின் இரண்டு முகாம்கள் மீதும் விமானப்படையினர் குண்டுகளை வீசித் தாக்கியதாகவும் ஊடகமத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புலிகளின் இலக்குகள் மீது துல்லியமாக குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment