Thursday, November 6, 2008

புலிகளுடன் தொடர்பு? இலத்திரனியல் ஊடகவியலாளர் கற்பிட்டியில் நேற்று கைது.

புலிகளுடன் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படும் இலத்திரனியல் ஊடகவியலாளர் ஒருவரை கடற்படையினர் நேற்றுக் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து செலியூலர் தொலைபேசிகளுக்கான 12 சிம்கார்ட்டுகள், 2006ஆம், 2007ஆம் ஆண்டு தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டைகள், இவரது பெயரிலேயே உள்ள 3 தேசிய அடையாள அட்டைகள், இரண்டு கடவுச் சீட்டுக்கள், 12 பற்றுச்சீட்டுப் புத்தகங்கள், றப்பர் சீல்கள் போன்றவற்றை கற்பிட்டி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபரை கடற்படையினர் கற்பிட்டி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கற்பிட்டியில் திருமணம் செய்து கொண்டுள்ளவர் என்றும் ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலத்திரனியல் ஊடகவியலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போதும் அந்த நிறுவனம் அதை மறுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment