இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அதியுயர் அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க பிரிக்கப்பட்ட போது அது பலகோணங்களிலும் விமர்சிக்கப்பட்டிருந்தது. அவ்விமர்சனங்களில் குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச அவர்கள் இவ்விரு மாகாணங்களையும் பிரித்து கிழக்கு தமிழ் மக்களை வடக்கு மக்களிலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை கிழக்கு மாகாணத்தில் விகிதாசார அடிப்படையில் மேலும் சிறு குழுவினராக்கி கிழக்கு மாகாண சபையை சிங்களவர்கள் கைப்பற்றுவற்கு வழிவகுப்பதே திட்டம் என புலிகள் உலகளாவிய ரீதியில் புரளி கிளப்பி வந்தனர்.
புலிகளின் இப்புரளியை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி கிழக்கில்
தேர்தல் ஒன்றை நாடாத்தி அங்கு மக்களின் தீர்ப்புக்கு இடமளிக்கும் அதே நேரம் ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுடாக கிழக்கு மாகாண முதல்வராக தமிழர் ஒருவரையே நியமிப்பதாக திடசங்கர்ப்பம் பூண்டிருந்தார்.
தமிழர் ஓருவர் முதலமைச்சராவதை ஏற்க மறுத்த தமிழ் மக்களின் போராட்டத்தின் பெயரால் தமது அரசியல் அங்கீகாரத்தை சுலபமாக பெற்றுக்கொண்ட முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினிமா செய்த ரவூப் ஹக்கிம் புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய தேசியச் கட்சியுடன் கூட்டமைத்து ஐ.தே. கட்சியின் சின்னத்தில் களமிறங்கினார். மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்த முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வேண்டும் என நிபந்தனைகளை விதித்து நின்றனர். தேர்தல் முடிவில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்ற போது ஹிஸ்புல்லா சபையின் முதலமைச்சராக வேண்டும் என அனைத்து முஸ்லிம்களும் ஜனாதிபதி மீது பாரிய அழுத்தம் ஒன்றை பிரயோகித்து நின்றனர். ஆனால் தமிழர் ஒருவரையே முதலமைச்சராக நியமிப்பதென்ற தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்த ஜனாதிபதி திரு. மௌனகுருசாமி அவர்களை முதலமைச்சாராக நியமிக்க முயற்சித்த போதும் அதனுள் அடக்கப்பட்டிந்த வேலைத்திட்டங்களை புரிந்து கொள்ள முடியாத பிள்ளையான் அழுது புலம்பி பதவியை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதியின் தொலைநோக்கு சிந்தனையால் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளமுடியாமல் போன முஸ்லிம்கள் தமது வழமையான வஞ்சக செயல்பாடுகளில் இறங்கலாகினர். பிள்ளையானுடன் ஒட்டிக்கொண்ட முஸ்லிம்கள் அவருக்கு பசப்பு வார்த்தைகள் கூறி எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உங்களுக்கே என்றும் ஆசை காட்டி நயவஞ்சகத்தனமாக தவறான வழியில் கொண்டு செல்கின்றனர். இந்நிலைமைகளை துல்லியமாக விளங்கிக் கொண்ட தமிழ் அரசியல் அவதானிகள் மற்றும் நலன்விரும்பிகள் விமர்சனங்களாகவும், நேரடியாகவும் மற்றும் பல வகைகளிலும் பிள்ளையானுக்கு எடுத்து கூறிய போதும் அவர் அவற்றை உணரமறுப்பது துரதிஸ்டவசமானதே.
கிழக்கு மகாண சபை நிறுவப்பட்ட கடந்த யூன் மாதத்தில் இருந்து அச்சபைக்கு வழங்கப்பட்ட சகல வளங்களையும் முஸ்லிம் சமுகத்தினரே அனுபவித்து வருவதுடன் முதலமைச்சர் பிள்ளையானை திட்டமிட்ட வகையில் நயவஞ்சகத்தனமாக அரசிற்கு எதிராகவும் தூண்டி விட்டுவருகின்றனர். முஸ்லிம்களின் திட்டமிட்ட சதிக்கயிற்றை விழுங்கிய பிள்ளையான் இவ்வார இறுதி ஆங்கில நாளேடொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ள சில விடயங்கள் கிழக்கு மக்களினது மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் அரசாங்கம் சந்தேக கண் கொண்டு பார்க்க வைத்துள்ளது.
தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டமே இலங்கையில் முஸ்லிம்கள் அரசியல் அந்தஸ்த்து பெற்றுக்கொள்ள ஏதுவாக அமைந்தது என்றால் மிகையாகாது. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த போது அவற்றை எதிர்கொள்வதற்கு வடகிழக்கில் எவ்வித அரசியல் தளமும் இல்லாதிருந்த முஸ்லிம்களது தேவை ஆட்சியாளர்கட்கு உருவானது. அப்போது தமிழரின் ஆயுதப்போராட்டத்தை முடக்க உதவி புரிவதாக கூறிக்கொண்டு அரசுடன் இணைந்து கொண்ட முஸ்லிம்கள் சுயலாப அரசியல் நாடாத்தி வந்தனர், கிழக்கு மக்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுடன் இணைந்த போது தாம் தற்காலிகமாக பெற்றுக்கொண்ட அரசியல் அந்தஸ்த்தையும் முகவரியையும் இழக்க நேரிடும் என அஞ்சுகின்றனர்.
ஆட்சியமைக்கும் அரசுடன் இணைந்து கொண்ட முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் பாரம்பரியங்களை அழித்தொழித்துள்ளதுடன் பல பழிவாங்கல்களையும் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்கள் அங்கம் வகித்து வந்த ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இணைவு முஸ்லிம்களுக்கு பலத்த தலையிடியை உருவாகியுள்ளதுடன் எந்தத் தரப்பு அதிகூடிய பலத்தை கூட்டணிக்கு வழங்குகின்றதோ அக்கட்சிக்கு முன்னுரிமையும் சலுகைகளும் வழங்கப்படும் என்கின்ற நியாயமான நிபந்தனையையும் உருவாக்கியுள்ளது. பல பிரிவுகளாக பிளவுபட்டு அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகட்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஒன்றுபட்ட பலம் பலத்த சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் தம்முள் ஒன்று படமுடியாத முஸ்லிம்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை பிளவுபடுத்துமுகமாக பிள்ளையானை சுற்றிச் சூழ்ந்து அவரிடமுள்ள குறைபாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தவறான வழிக்கு தள்ளுகின்றனர். இவ்வாறான வழிநடத்தல்களின் ஊடாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை கூறுகளாக பிரித்து தமிழர் பலத்தை சின்னாபின்னமாக்கி அவர்கள் கொண்டிருக்கக்கூடிய பேரம் பேசும் பலத்தை சிதைப்பதே முஸ்லிம் தரப்பினரின் திட்டமாகும்.
இன்று முற்று முழுதாக முஸ்லிம் தரப்பினரால் இயக்கப்படுகின்ற பிள்ளையானது அண்மைய கருத்துக்களால் பெரும்பாண்மை இன மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே அண்மைக்காலமாக உருப்பெற்று வந்த புரிந்துணர்வில் பெரும் இடைவெளி உருவாகும் நிலை தோன்றியுள்ளது.
இவ்விடயத்தில்தான் கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகின்றது. கிழக்கிலே அபிவிருத்தி நடைபெறுகின்றது. ஆனால் அவை மத்திய அரசின் அமைச்சர்களால் நேரடியாக இடம்பெறுகின்றது என பிள்ளையான் கூறுகின்றார். இங்கு பிள்ளையானது ஆதங்கம் தனது அதிகாரவெறிக்கு தீனிபோடப்படவில்லை என்ற பிரபாகரனை ஒத்த மனோவியாதியாகும். ஆனால் கருணா அவர்களைப் பொறுத்தவரை பிரதேச அபிவிருத்திக்கே தான் முன்னுரிமை அளிப்பதாகவும் கடந்த மூன்று தாசாப்த போரிலே எமது மக்கள் இழந்த அனைத்து வளங்களையும் மீழப்பெற்று சாதாரண நிலைக்கு திரும்பிய பின்னரே அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்கள் சம்பந்தமாக தனது பார்வையை திருப்பவுள்ளதாகவும் கூறிவருகின்றார். பொலிஸ் அதிகாரம் பற்றி கருணா அவர்கள் கூறியிருந்த கருத்து தொடர்பாக இலங்கைநெற் சார்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டிருந்த போது "பொலிஸ் அதிகாரம் தற்போதைய அவசரத்தேவை இல்லை" என்பது பொலிஸ் அதிகாரம் எமக்கு வேண்டாம் என்று கூறியதாக அர்த்தப்படாது எனக் கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்திற்கு பலமுறை விஜயம் கொண்ட கருணா அவர்கள் அங்குள்ள கல்வித்துறைசார் அதிகாரிகள், வைத்திய-சுகாதாரத்துறை அதிகாரிகள், சிறுகைத்தொழில் விடயங்கள் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளின் குறைபாடுகளை கேட்டறிந்ததுடன் அவர்களை சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு கொண்டு சென்று உரிய அமைச்சர்களுடன் நேரடியான கலந்துரையாடல்களை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார். இக்கலந்துரையாடல்கள் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய அதிகாரிகளுடன் தமது பிரச்சினைகளை நேரடியாக எடுத்துக்கூறி தமது பிணக்குகளுக்கான தீர்வுகளைக் கண்டுள்ளனர். இவ் ஏற்பாடுகளின் ஊடாக அங்குள்ள மக்கள் தமது தேவைகளை துரித கதியில் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பலவுள்ளன.
இன்று கிழக்கு மகாணசபை முஸ்லிம்களின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள தருணத்தில் அச்சபைக்கு கிடைக்கின்ற சலுகைகள் யாவும் அவர்கள் சார்ந்த சமூகத்தையே சென்றடைகின்ற நிலையில் தமிழர் நேரடியாக மத்திய அரசுடன் பேசி தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதை விமர்சித்து அரசிற்கெதிரான கருத்துக்களை பிள்ளையான் வெளியிடுவதானது அவரது அதிகார மோகத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. இங்கு ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். கிழக்கில் நடைபெறும் அபிவிருத்திகள் மத்திய அரசின் அமைச்சர்களால் நேரடியாக மேற்கொள்ளப்படுகின்றது, மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்கின்றார். இன்று எமது மக்களின் அதி அவசர தேவை அபிவிருத்தியேயாகும் அந்த வகையில் "யார் குத்தியாவது அரிசியானால் போதும்" என்று அவற்றை செய்கின்றவர்களுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்து அதிகாரத்திற்காக அழுதுவதால் எம்மக்கள் மேலும் பின்நோக்கி செல்வரே அன்றி எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. இங்கு பிள்ளையானது முழு ஆதங்கமும் தனது சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பதுவே. VIII
No comments:
Post a Comment