Monday, November 10, 2008

புலிகளின் ஆதரவாளர்கள் இந்தியாவின் எதிரிகள். அமைச்சர் இளங்கோவன்.

இந்திய அரசின் புடவைக்கைத்தொழில் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருத்தருமான இ.வீ.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் கடந்த சனிக்கிழமை துத்துக்குடியில் நடந்த பத்திரிகை மாநாடு ஒன்றில் பேசும்போது புலிகளின் ஆதாரவாளர்ள் இந்தியாவின் எதிரிகள் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில் இந்திய அரசினால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து பேசுகின்ற அனைவரும் கைது செய்யப்படவேண்டும். புலிகள் ஓர் பயங்கரவாத இயக்கம் அவர்ளுக்கு ஆதரவு தெரிவிகின்றவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும். இலங்கைப் பிரச்சினையில் மக்களை கருத்தில் கொண்டு நாம் பிரச்சினைகளை அணுகவேண்டும். இங்கு இவ்விடயம் சம்பந்தமாக ஓர் பிழையான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புலிகள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. புலிகளுக்கு செய்கின்ற உதவிகள் அங்குள்ள மக்களுக்கு செய்வதாக அர்த்தப்படாது. எனவே இந்நிலையில் புலிகள் சந்பந்தமாக செல்வி. ஜெயலலிதா அவர்கள் கொண்டுள்ள கொள்கையை நான் பாராட்டுகின்றேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com