தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோருகின்றார் மன்மோகன்சிங்.
புலிகளைப் பூண்டோடு ஒழிக்கும் வரை பேச்சுக்கு இடமில்லை என்கின்றார் மகிந்த.
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து இலங்கையின் சமகாலப் பிரச்சினைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஜனாதிபதி தரப்பு செய்திகளைக் கேட்டறிந்த பிரதர் இலங்கையில் தமிழ்மக்களின் பாதுபாப்பு மற்றும் அவர்களது அத்தியாவசியத்தேவைகளை உறுதிப்படுத்துமாறு வேண்டியுள்ளார்.
வங்கக் கடலோர பன்முகப் பொருளாதார கூட்டுறவு (பிம்டெக்ஸ்) மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இலங்கையில் புலிகள் இயக்கத்தை பூண்டோடு அழிக்கும் வரை அரசியல் பேச்சுவார்த்தை என்ற கூற்றுக்கு இடமில்லை எனவும் மறுபுறத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்பதற்கு தன்னால் முடியுமான சகல விடயங்களையும் மேற்கொண்டு வருவதாகவும் இத்தனைகாலங்களாக முடங்கிப்போய்க் கிடந்த 13ம் திருத்தச்சட்டம் தனது ஆட்சியில் அமுலில் உள்ளதாகவும் 1200 தமிழ் இளைஞர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்து அவர்களில் ஒரு தொகுதியினர் இந்தியாவில் பயிற்றுவிக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment