இந்தியா மிக்பெரிய ஜனநாயகநாடு அதை பயங்கரவாதிகளால் தோக்கடிக்க முடியாது என்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
இந்தியாவில் பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களைத் தொடாந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்ட அண்மையில் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றிபெற்று பதவிஏற இருக்கும் பராக் ஒபாமா அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். அவர் அங்கு தெரிவித்துள்ளதாவது.
இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளதாக அறிந்துள்ளேன். அவர்களது ஆன்மசாந்திக்காக பிரார்திக்கின்றேன். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்தியாவை பயங்கரவாதிகளால் தோற்கடிக்க முடியாது. புயங்கரவாதிகளை வீழ்த்தும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா தொடர்ந்தும் இந்தியாவிற்கு உதவிகளை வழங்கும். இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை பாதுகாக்க புஸ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எனது பூரண ஆதரவு உண்டு. மும்பாய் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment