Sunday, November 2, 2008

அக்கரைப்பற்று பிரதேசத்தில் புலமைப்பரிட்சைகளில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.



இவ்வருடம் இடம்பெற்ற 5ம் ஆண்டுக்கான புலமைப்பரிட்சையில் அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதேசங்களில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட இருப்பதுடன் அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரில்களும் வளழங்கப்பட உள்ளன. இன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இனியபாரதி தலைமையில் ஒன்று கூடிய கிராம அபிவிருத்தி சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இவ்விடயத்தை முன்மொழிந்தனர். இம்மாணவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்ட இனியபாரதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் நிதியிலிருந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையிலான பரிசில் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment