Wednesday, November 26, 2008
கப்பம் கொடுக்க மறுத்த மீன் வியாபாரி பலப்பிட்டிய சந்தையில் சுட்டுக் கொலை.
பலப்பிட்டிய மீன் சந்தையில் கப்பம் கொடுக்க மறுத்த வியாபாரி ஒருவர் இனம் தெரியாத மூவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர் மீன் சந்தையினுள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த மூவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இவரிடம் நீண்ட நாட்களாக சிலர் கப்பம் கேட்டு வந்ததாதாகவும் ஆனால், அவர் அதற்கு இணங்க மறுத்திருந்தார் எனவும் தெரிய வந்துள்ளது.
ரீ 56 ரக துப்பாக்கிச் சன்னங்கள் சம்பவ இடத்தில் இருந்து பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டன. இக் கொலையைச் செய்தவர்கள் மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் வர்த்தகர்களிடம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் அண்மைக் காலங்களில் வர்த்தகர்களிடம் கப்பம் கேட்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தாம் சுதந்திரமாக தமது வியாபார நடவடிக்கையைச் செய்ய பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இந்த வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment