தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் ரகுவின் இறுதி யாத்திரை பல மைல் தூரம் நீண்டது.
இன்று காலை 11.00மணிக்கு ஆரம்பமான ரகு அவர்களின் இறுதி யாத்திரை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது வீட்டில் இருந்து பிரதான வீதி வழியாக கல்லடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பெருந்தொகையான மக்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போராளிகளும், மாணவர் சமூகமும், அரச அதிகாரிகளும் திரண்டு வந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு மைல் கணக்கில் நீண்ட இறுதி யாத்திரையில் பங்கெடுத்தனர்.
"கண்டுகொண்டோம் கொலைஞர்களை கலங்கவில்லை எம் மனங்கள்" என்ற கோசம் வானைப் பிழக்க கடும் வெயில் மத்தியில் மக்களின் இதயக்கனலும் தெறித்தது. இடை மறித்த சிவானந்தா வித்தியாலய மாணவர்கள் தமது அஞ்சலியைச் செலுத்தி அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி விடைகொடுத்தனர்.
திரண்டு வந்த மக்கள் வெள்ளத்திற்கு முன்னே மாணவர்களது 'பான்ட்' வாத்தியம் இசைக்கப்பட்டு ரகுவினுடைய பூதவுடல் கல்லடி மயானம் வரை எடுத்துச் செல்லப்பட்டு குடும்பத்தவர்களின் சம்ரதாய முறைப்படி பி.ப.1.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
0 comments :
Post a Comment