நாகர்கோவில் பிரதேசத்தில் புலிகளின் அணைக்கட்டுக்கள் தகர்க்கப்படுகின்றன.
நேற்றுக்காலை 4.35 மணிக்கும் 11.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் புலிகளின் நாகர்கோவில் பிரதேச முன்னணி அரங்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட படையினர் புலிகளுக்கு பலத்த சேதத்தை உருவாக்கியுள்ளதுடன் புலிகளால் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள 15-20 மீற்றர் நீளமான அணைக்கட்டுகளை உடைத்து நாசம்பண்ணி உள்ளனர். இத்தாக்குதல்களில் புலிகளின் பல பங்கர்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அக்கராயன்குளம், ஆண்டான்குளம், கிளிநொச்சி, மணலாறு பிரதேசங்களில் புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்வதாகவும் ஆண்டான்குளம் பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது 120 மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment