Wednesday, November 19, 2008

முரலிதரன் எம்பி கிழக்கு மாகாண பிரதிநிதிகள் சகிதம் தொழில்துறை அமைச்சர் குமார வெல்கம அவர்களைச் சந்தித்தார்.



கிழக்கு மாகாணத்தில் சிதைவடைந்த கைத்தொழிற்சாலைகளை மீளக் கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்.(கருணா அம்மான்) தொழிற்சாலைகள், தொழில்துறை அமைச்சர் குமார வெல்கம அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று காலை 10 மணியளவில் தொழிற்சாலைகள், தொழில்த்துறை அமைச்சின் அலுவலகத்தில் நடந்த இச்சந்திப்பில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலிருந்து விஸ்வநாதன், கருணாகரன், பொறியிலாளர் பாலா, மூர்த்தி ஆகியவயோர் சமூகமளித்திருந்ததுடன் தத்தமது மாவட்டங்களிலுள்ள கைத்தொழிலுக்கான வளங்களையும் அவற்றை மேம்படுத்தக்கூடிய கைத்தொழில் ஊக்குவிப்பு திட்டங்களையும் அமைச்சர் குமார வெல்கம அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்களான ஜீவேந்திரன், கலை, மயூரன், கருணா அம்மானின் பிரத்தியோக செயலாளர் சின்னையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் முடிவில் மட்டக்கப்பு மாவட்டத்தில் ஓட்டுத் தொழிற்சாலை, திருகோணமலை மாவட்டத்தில் உப்பு தொழில்ற்சாலை, நெசவு தொழிற் சாலை போன்றவற்றை அமைத்தும் சிறு கைத்தொழில் ஊக்கவிப்பு திட்டங்களையும் மேம்படுத்துவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளாதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முரலிதரன் இத் திட்டங்களினூடாக எதிர்காலத்தில் அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு ஓர் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்ப்படுத்துமென தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment