Thursday, November 13, 2008
பயங்கரவாதமுட்பட அனைத்துக் குற்றச் செயல்களையும், இந்தப் பிராந்தியத்திலிருந்து ஒழிப்பதற்கு ஒத்துழைப்போம்.
புதுடில்லியில் நடைபெறும் வங்காள விரிகுடா கடல் பகுதி நாடுகளின் இரண்டாவது மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, பயங்கரவாதம், குற்றச்செயல்கள், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை இந்தப் பிராந்தியத்திலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினைத் தாராளமாக வழங்குமென
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, சர்வதேச வலையமைப்பின் ஊடாக பயங்கரவாதக் குழுக்கள், பணம் திரட்டுதல், போதைப் பொருள், ஆயுதம், ஆட்கடத்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளிலீடுபட்டு வருகின்றனர். இந்தக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தையும் ஒரு தளமாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் கடற்பரப்பினூடாகவே அதிகம் நடைபெறுகிறது. ஆகவே இக் கடற்பரப்புக்களில், இடம்பெறும் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு வங்காள விரிகுடா கடற்பரப்பைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளை எமது இந்த அமைப்புச் செய்ய வேண்டுமென்ற ஆலோசனையை முன்வைக்கிறேன்.
அது மட்டுமல்லாது, பிராந்திய நாடுகளின் உல்லாசப் பயணத்துறையை நாம் ஊக்குவிக்க வேண்டும் இதற்குத் தகவல் தொழில் நுட்ப மையங்கள் அவசியம். கூட்டு வர்த்தக நடவடிக்கைகளும் இங்கு அவசியமாகிறது. இது குறித்து நாம் ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்தது. உல்லாசப் பயணத்துறையை இந்தப் பிராந்தியத்தில் ஊக்குவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முழு ஒத்துழைப்பினையும் வழங்கும். ஹோட்டல் பாடசாலைகள் மூலமும் இதனைச் செய்ய முடியுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment