Wednesday, November 12, 2008

களமுனையில் நான்கு பெண்புலிகள் கைது. ஒருவர் ஆங்கில ஆசிரியை.




ஏ32 வீதியில் பாலாவிக்கு அண்மையில் உள்ள 7ம் மைல் கல்பிரதேசத்தில் இடம்பெற்ற சண்டையின் பின்பு புலிகளின் நான்கு பெண் உறுப்பினர்களை படையினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மற்றறைய மூவரும் நிலாவெளி வயது 28, இழவேனி வயது 18, துறுவேனி வயது 19 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலாவெளி இலங்கை கல்வியமைச்சின் சம்பளத்தை சட்டப்படி பெற்றுவந்த ஆங்கில ஆசிரியை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது: அங்கு நிலாவெளி தெரிவித்திருப்பதாவது. தான் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் படித்து ஆசிரியராகி கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் படிப்பித்து வந்ததாகவும் கிளிநொச்சியில் வீட்டிற்கு ஒருத்தரை புலிகளியத்தக்தில் இணைக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையில் இருந்து தமது 18 வயத நிரம்பாத தம்பியை காப்பாற்றி கொள்வதற்காக தான் புலிகளுடன் இணைந்தாகவும் அவ்வாறு 2007 ஆம் ஆண்டு ஜனவவரி மாதம் இணைந்து மூன்றுமாத இராணுவப்பயிற்சியின் பின்பு ஏப்பரல் மாதத்தில் களமுனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவத்துள்ள அவர் கிளிநொச்சியில் தன்னைப்போன்று ஏறக்குறைய 100 ஆசிரியர்கள் அரச சம்பளத்துடன் அரசபடைகளுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவதாகவும் அத்துடன் அரச திணைக்கள லிகிதர்கள் மற்றும் விவசாயத்திணைக்கள உத்தியோகித்தர்கள் அரச சம்பளத்துடன் அரசிற்கெதிராக போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment