குறுந்தையடி படுகொலைகளின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க மக்களின் ஒத்துழைப்பை கோருகின்றார் - இனியபாரதி.
K.ராஜகுபேரன் A.ஜெயசேகர் S.கார்த்திக் சுதாகரன் ஜோகப்பிரகாஷ்
கடந்த 02ம் திகதி கல்முனை குறுந்தையடி கடற்கரைப் பிரதேசத்தில் கூடிக் கதைத்துக்கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இங்கு இளம் குடும்பஸ்தரும் ஒரு குழந்தையின் தந்தையுமாகிய கதிரவடிவேல் ராஜகுபேரன் (1982.07.01) ஜிஏஸ்பி வீதி, குறுந்தையடி, ராஜகுலேந்திரன் ஜோகப்பிரகாஷ் (1981.02.28) சேனைக்குடியிருப்பு 01ஏ, சிறி சுதாகரன் (1980.06.03) அரசடி அம்மன்கோவில் வீதி, பாண்டிருப்பு 02, எஸ்.கார்த்திக் (1987.02.11) ஜிஏஸ்பி வீதி, குறுந்தையடி, ஆறுமுகம் ஜெயசேகர் (1987.11.21) ஜிஏஸ்பி வீதி, குறுந்தையடி ஆகியோரே படுகொலைசெய்யபட்டவர்கள் ஆகும்.
இக்கொலைகளின் பின்னணி என்ன? யாரால் இது மேற்கொள்ளப்பட்டது? எவ்வாறு இது நிகழ்ந்தது? பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட .கூடிய நிவாரணம் என்ன? எதிர்காலத்தில் இவை தொடராமல் இருக்க மேற்கொள்ள வேண்டியவை யாது? என்கின்ற வினாக்களுக்க விடை காண்பதைத் தவிர்த்து அரசியல்வாதிகள் வழமைபோல் இவ்விடயத்தை மையப்படுத்தி அரசியல் லாபம் தேடவும் தமது அரசில் எதிரிகள் மீது பழி சுமத்தவும் முற்பட்டுள்ளனர்.
இவர்களது இச்சுயலாபச் செயற்பாடுகளானது குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்ள வழியமைத்துள்ளது. பிரதேச செய்திகளின் அடிப்படையில் கடற்கரைப்பிரதேசத்தில் இவ் இளைஞர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வழியால் வந்த விஷேட அதிரடிப்படையினரே இக்கொலைகளைப் புரிந்ததாக பிந்திக்கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எமது அர்ப அரசியல்வாதிகளின் இனவாதப்போக்கும் அரசியல் லாபங்களுக்காக தனிநபர்கள் புரிகின்ற தவறுகளுக்கு ஒட்டுமொத்த இனத்தின், அரசாங்கத்தின், கட்சிகளின், ஸ்தாபனத்தின் மீது பழிசுமத்த முற்படுகின்ற போது குற்றவாளிகள் இலகுவாக தப்பித்துக் கொள்கின்றனர்.
இக்கொலைகாரர்கள் எந்த விதத்திலும் மன்னிக்கூடிய மனிதர்கள் அல்ல. ஆனால் அவர்களது இவ்வாறான மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகளை அரசியல்வாதிகள் தமது சொந்த லாபங்களுக்காகவும் சுயவிளப்பரத்திற்காகவும் பயன்படுத்துகின்றபோது கொலைகாரர்கள் ஓர் இனத்தின் மீது பற்றுள்ள மனிதர்களாக்கப்படுகின்றனர். இக்கொலைகளை தாம் சார்ந்த சமூகத்தில் நலனுக்காக செய்யப்பட்டதாக கூறி தம்பித்துக் கொள்கின்றனர். அங்கு அவர்கள் தாம் சார்ந்த சமூகத்தாலும் அமைப்பாலும் காப்பாற்றப்படுகின்றனர்.
யார் இந்த மனிதர்கள்? இவ்வுலகிலே மனித உயிர்களை மதிக்காத மனிதர்கள், மதத்தையோ இனத்தையோ மொழியையோ மதிக்கப் பிறந்தவாகள் அல்லர். தமது சுயலாபங்களுக்காக தான்சார்ந்திருக்கும் சமுதாயத்தில் தம்மை ஒர் சிறந்த வீரர்களாகவும் இனவாதிகளாகவும் காட்டிக்கொள்ள முனையும் இவர்களே இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஈனச்செயலுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டுமானால் முதலாவது இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இவர்கள் சமாதானத்தை, இனஒற்றுமையை, மனிதத்தை, அரசின் சட்டதிட்டங்களை மதிக்காத மனிதர்கள் என்பதை அவர்கள் சார்ந்திருக்கின்ற அரசிற்கும் சமூகத்திற்கும் உணர்த்த வேண்டும். ஆனால் இன்று தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மாநாதன் இந்த ஈனகொலைகளில் தேட முற்பட்ட இலாபமானது கொலைகாரர்கட்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக பத்திரிகை அரசியல் நாடாத்திக்கொண்டிருக்கும் எம்பி அவர்கள் இக்கொலைகளுக்கு அரசியல் மற்றும் இனவாத முலாம் பூசியபோது கொலையாளிகள் தப்பித்து கொண்டுள்ளார்கள். பத்திரிகைகட்டு அறிக்கைவிடுவதையே அரசியலாக கொண்டுள்ள இவர்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் இனவாதம் மேலோங்கி மனிதகுல விரோதிகளின் இச்செயல்கள் நியாயப்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் இனியபாரதி அவர்களை தொடர்பு கொண்டு இவ்விடயம் சம்பவம் தொடர்பாக அவ் அமைப்பு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி வினவியபோது அவர் தெரிவித்ததாவது.
நாம் இவ்விடயம் சம்பந்தமாக மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து விசேட அதிரடிப்படையினரே இச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இருந்த போதிலும் இவ்விடயம் சம்பந்தமாக ஊடகங்கள் செய்திகளை கொண்டுவந்தவிதம் மக்களின் சிந்தனையை திசைதிருப்பியுள்ளது. இங்கு கொல்லப்பட்டுள்ள ஐவரும் எவ்வித அரசியல், ஆயுத அமைப்புகளின் பின்னணி அற்றவர்கள் ஆனால் ஊடகங்கள் அவர்ளுக்கு ரிஎம்விபி முலாம் பூசிய போது மக்கள் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று விலத்தி நிற்கின்றார்கள்.
இவ்விடயத்தில் என்னால் உறுதியாக கூறக் கூடிய ஓரே ஒரு விடயம் பத்திரிகைகட்கு அறிக்கை விட்டிருக்கும் எமது பராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் ஐயா அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை பாதுகாப்பு படையின் உயர்மட்டத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்கட்கு தண்டனை வாங்கி கொடுக்க முனைய வேண்டும் அன்றேல் அவரிடம் உள்ள தரவுகளை எமக்கு தந்துதவினால் நாம் அதை உரிய தரப்பினருக்கு வழங்கி சம்பந்தப்பட்டவர்கட்கு தண்டனை வாங்கிக் கொடுக்கு தயங்க மாட்டோம் என்பதுடன் இவ்விடயம் சம்பந்தமாக உண்மையான தகவல்கள் தெரிந்த பிரதேச மக்கள் யாராவது இருந்தால் அவற்றை எமக்கு தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களது பாதுகாப்பிற்கு நாம் உறுதி என்பதுடன் உங்களுடைய ஒத்தாசை எமது எதிர்காலதிற்கு மிகவும் உதவும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்ற அவர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து ரயல் அட்பார் முறையில் விசாரணைகள் மேற்கொண்டு தண்டனைகளை முடிந்தவரை வெகுவிரைவில் பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்க முடியும் என்பதை எதிர்வரும் ஜனாதிபதியினுடனான சந்திப்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க உள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு சம்பந்தமாக வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment