Thursday, November 6, 2008

பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய ஜனாதிபதி புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு ஜனநாயக வழிக்கு திரும்ப வேண்டும் என்கின்றார்.



2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு ஆயுதங்களை கீழே வைப்போரிற்கு அரசாங்கம் புனர்வாழ்வு வழங்குமெனவும் தெரிவித்த ஜனாதிபதி அங்கு தமிழில் பேச ஆரம்பித்தார்.

அங்கு அவர் தமிழில் பேசியதாவது.

கௌரவ சாபாநாயகர் அவர்களே!

கொடுரமான பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்த வாழுகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேச அப்பாவி மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். ஏமது பாதுகாப்புப் படை அங்கு வருவது மனித நேயத்தின் பெயரால் உங்களை மீட்கவே.

கௌரவ சாபாநாயகர் அவர்களே! 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் பிரதேசமாக இருந்த வடபகுதியை மீண்டும் கட்டி எழுப்பும் காலம் வந்துள்ளது. எந்தவித இனபேதம், மதபேதம், குறுகியநோக்கம் இல்லாமல் மனித நேயத்தோடு நான் உங்களைப் பாற்கின்றேன். மிகவும் கஸ்டமான நிபந்தனைகளின் கீழ் வாழ்கையோடு போராடிக்கொண்டிருக்கும் உங்களுடைய அண்றாட பிரச்சினைகளை தீர்க்க நான் நடவடிக்கை எடுப்பேன். அதை அவ்வாறு நிறைவேற்ற அடுத்த வருடம் முன்னுரமை வழங்க எனது அரசாங்கம் எதிர்பார்கின்றது.

No comments:

Post a Comment