Thursday, November 6, 2008

சிலாபம் பகுதியில் சிறிய நில அதிர்வு.



சிலாபம் பகுதியில் நேற்றுக்காலை 10.00 மணியளவில் நான்கு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிலாபம் பஸார் வீதியிலுள்ள நான்கு கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமாகியிருப்பதுடன் சுவரில் சிறிய வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அதே இடத்தில் நேற்று முந்தினம் காலை 10.00 மணியளவிலும் சிறிய நில அதிர்வுகள் உணரப்பட்டிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர். நேற்று முந்தினத்திலும் பார்க்க நேற்று கூடுதலான நில அதிர்வுகள் சிலாபம் நகரில் உணரப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment