ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (06.11.2008) வியாழக்கிழமை வரவு-செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளதை முன்னிட்டு, பாராளுமன்றத்திலும் அதனைச் சூழவும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார நேற்று தெரிவித்துள்ளார். இதற்கிணங்க இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வுஅறை, உடுதுணி அலுமாரிகள் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்டிடத் தொகுதிகளும் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, நாளைய தினம் (06.11.2008) பாராளுமன்ற பார்வையாளர் பிரிவு (கலரி) விசேட விருந்தினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் சபாநாயகர் லொகுபண்டார தெரிவித்துள்ளார். அதேநேரம், நாளைய தினம் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் அங்கு தரித்து வைக்கப்படும். நாளைய தினம் பொலிஸார் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள் என்றும் சபாநாயகர் நேற்று அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment