ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (02.11.2008) மேல் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களைத் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இங்கு அந்தந்த மாகாணங்களின் அரசியல் பொருளாதார விடயங்கள் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அலரிமாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், ஏ.எச்.எம்.பௌஸி, டலஸ் அழகப்பெரும, பஷில் ராஜபக்ஷ எம்.பி. உட்பட பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
உலக நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி வடக்கில் இடம்பெறும் மனிதாபிமான நடவடிக்கைகள், 2009ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாகாண அமைச்சர்கள், எம்.பி. களின் கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment