Saturday, November 1, 2008
யாழ் பல்கலைக்கழக மாணவன் சயனைட் உட்கொண்டு தற்கொலை, சாகா சுட்டுக்கொலை.
இன்று நண்பகல் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் யாழ் அரியாலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை சோதனையிட முனைந்த போது ஒருவர் சயனைட் வில்லையை உட்கொண்டு தற்கொலை புரிந்துள்ளார். அவர் சயனைட்வில்லையை உட்கொண்டு மயங்கி விழும்போது ஓட ஆரம்பித்த அவரது சகா தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் படையினரை நோக்கி சுட்டவாறு ஓடி மறைந்துள்ளார். தொடர்ந்து அவரை விரட்டிச் சென்ற படையினர் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
தொடர்ந்து அங்கு தேடுதல் நாடாத்திய படையினர் அவரிடம் இருந்து 9 மிமி கைத்துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதுடன் சயனைட் வில்லையை உட்கொண்டவரது சட்டைப்பையில் இருந்து யாழ் பல்கலைக்கழக கலைப்பீட அடையாள அட்டையையும் கைப்பற்றி உள்ளனர். இவ் அடையாள அட்டை சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் படையினர் உடல்களை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் உடல்களை யாழ் நீதிமன்றில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி அவற்றை அடையாளம் காண்பதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment