Sunday, November 23, 2008
புலிகளின் கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறும் மக்கள் தொகை அதிகரிக்கின்றது. இன்று 81 பேர் ஓமந்தை வந்தடைந்தனர்.
வன்னியின் நிலப்பரப்பு படையினரால் கைப்பற்றபப்பட்டு வருகின்ற நிலையில் புலிகள் மக்களை தமக்கு பாதுகாப்பான இடங்கள் என தாம் கருதுகின்ற இடங்களை நோக்கி வெளியேற விடாமல் தமது கட்டுப்பாட்டினுள் பலவந்தமாக வைத்துள்ளனர். இதுவரை காலமும் புலிகளின் அடக்கு முறைகளுள் வாழ்ந்து வந்த மக்கள் தமது உயிரைப் பணயம் வைத்து புலிகளின் தடையை உடைத்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த காலங்களில் 15,20,25 என்ற எண்ணிக்கையில் சிறு சிறு கூட்டங்களாக வெளியேறிய மக்கள் கூட்டம் இன்று பெரும் எடுப்பில் வெளியேற ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இன்று 81 பேர் இரு பிரிவுகளாக வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடியை அடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் மக்கள் கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கில் புலிகளை நிராகரித்து வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment